×

சேனைக்கிழங்கு சோயா புலாவ்

செய்முறை: முதலில் சோயா சங்ஸ்சை சுடுநீரில் ஊறவைத்துப் பிழிந்து கொள்ளவும்.பல்லாரி, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டையை போட்டு தாளிக்கவும். பின் அரைத்த விழுதை போட்டு வதக்கவும். பிறகு நறுக்கிய சேனைக்கிழங்கு துண்டுகள் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் அரிசியை கழுவிப் போட்டு வதக்கவும். சோயா சங்ஸ்சை சேர்க்கவும். 1க்கு 2 பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வேக விடவும். பிறகு முந்திரி வறுத்து சேர்த்துப் பரிமாறவும்.சுவையான சேனைக்கிழங்கு சோயா புலாவ் ரெடி.

Tags : Yogurt ,soy pulau
× RELATED சென்னையின் குடிநீர் தேவைக்காக ரூ.100 கோடியில் திருநின்றவூர் ஏரி புனரமைப்பு